வி.பி.எப். கட்டணத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் – டி.ராஜேந்தர்

0
23

வி.பி.எப். கட்டணத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் – டி.ராஜேந்தர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெற்றால் சங்கத்துக்கு நிதி சேர்ப்போம். தயாரிப்பாளர்களுக்கு ஆன்லைன் புக்கிங் பங்கு கேட்போம். தியேட்டர்களில் முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு டிக்கெட் கொடுக்க வற்புறுத்துவோம். வி.பி.எப் கட்டணத்தை தற்காலிகமாக நீக்கி உள்ளனர். இந்தியா முழுவதும் அதை நிரந்தரமாக நீக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து போராடுவேன். சினிமாவுக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யவும் குரல் கொடுப்பேன். உள்ளாட்சி கேளிக்கை வரியை நீக்க அரசிடம் மனு கொடுத்தும் நீக்கவில்லை. இதை நீக்க தொடர்ந்து குரல் கொடுப்பேன். நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி உள்ளனர். அதில் செல்வாக்கு படைத்தவர்கள். செல்வந்தர்கள் இருக்கலாம். ஆனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தான் முறைப்படியானது. நடப்பு தயாரிப்பாளர்கள் என்று நீங்கள் சொல்வதால் எங்கள் சங்கத்தில் இருப்பவர்கள் வருத்தப்படுகிறார்கள். எனவே சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும். சினிமா தொழிலையும் சிறுபட தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற போராடுவேன்.“

இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.