‘விஜய் 67’ : மீண்டும் விஜய்யுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?

0
152

‘விஜய் 67’ : மீண்டும் விஜய்யுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?

நடிகர் விஜய் மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்திருந்தனர். கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ வெளியானது. கொரோனா சூழலிலும் தியேட்டர்களில் வெளியான படங்களில் ‘மாஸ்டர்’ மட்டுமே வசூலைக் குவித்ததாக கூறப்படுகிறது.

‘மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், விஜய் – லோகேஷ் கனகராஜ் வெற்றிக்கூட்டணி மீண்டும் ‘விஜய் 67’ படத்தில் இணையவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில்‘விஜய் 66’ படத்தின் பூஜை தசரா அன்று தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.