விஜய்யின் 65-வது, 66-வது, 67-வது படத்தை இயக்கும் மூன்று இயக்குனர்கள் யார் தெரியுமா?

0
154

விஜய்யின் 65-வது, 66-வது, 67-வது படத்தை இயக்கும் மூன்று இயக்குனர்கள் யார் தெரியுமா?

விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அடுத்து 3 படங்களில் அவர் தொடர்ந்து நடிப்பது உறுதியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம்.

நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பை ரஷியாவில் நடத்துவது என்றும், அக்டோபர் மாதத்துக்குள் முழு படத்தையும் முடித்து அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருவது என்றும் திட்டமிட்டு உள்ளனர். விஜய்யின் 66-வது படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்க உள்ளது. அடுத்த வருடம் கோடையில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

தொடர்ந்து விஜய் நடிக்கும் 67-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. 2 படங்களையும் இயக்க சுதா கொங்கரா, மகிழ் திருமேனி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன.