லிப்ட் விமர்சனம்

0
84

லிப்ட் விமர்சனம்

கவினும், அம்ரிதாவும் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் புதிதாக சேருகின்றனர். எதிரும் புதிருமாக இருக்கும் கவின் டீம் லீடராகவும், அம்ரிதா மனிதவள அதிகாரியாகவும் இருக்கின்றனர். உயர் அதிகாரியின் வற்புறுத்தல் காரணமாக கவின் ஒவர் டைம் வேலை செய்து விட்டு இரவு வேலை முடித்து விட்டு லிப்டில் இறங்குகிறார். ஆனால் லிப்ட் கட்டுப்பாட்டில் இயங்காமல் ஆமானுஷ்ய சக்தியால் இயக்கப்படுகிறது. இதனால் தன்னுடைய அலுவலகத்திற்கு மீண்டும் வரும் கவின் அங்கே அம்ரிதா ஒரு அறையில் மாட்டிக்கொண்டு அலறுவதை கேட்டு அவரை காப்பாற்றி மீண்டும் லிப்டில் செல்கிறார். அது முதல் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் இருவரும் லிப்டில் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் செல்லும்படி ஆகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் பயத்தில் இருவரும் இருக்க, ஆமானுஷ்ய சக்தி என்ன செய்தது? எதனால் இருவரையும் துரத்துகிறது? இறுதியி;ல் இருவரும் தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.

இதில்  கவின், அம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் பயமுறுத்தும் அச்சுறுத்தலோடு படம் முழுவதும் பக்குவாக நடித்து முத்திரை பதித்துள்ளனர். மற்றும் கிரண் கொண்டா, காயத்ரி ரெட்டி, பாலாஜி வேணுகோபால், முருகானந்தம் துணை கதாபாத்திரங்கள் படத்திற்கு பலம்.

பிரிட்டோ மைக்கேலின் இசைவும், எஸ்.யுவாவின் ஒளிப்பதிவும் பேய் படங்களுக்கான காட்சிக் கோணங்களை திறம்பட கையாண்டு மிரள வைத்துள்ளனர்.
ஜி.மதனின் படத்தொகுப்பும் எம்எஸ்பி.மாதவனின்; கலையும் படத்தின் உயிரோட்டமான கதைக்களத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.

ஆமானுஸ்ய சக்தியால் ஆட்டி படைக்கப்படும் லிப்ட. இந்த மர்ம முடிச்சுக்களை இறந்த காதல் ஜோடியின் பழி வாங்குதலோடு இணைத்து அதற்கு காரணமான உயர் அதிகாரி, செக்யூரிட்டிகளை பழி வாங்கும் திகில் நிறைந்த கதையில் ஐடி கம்பெனியின் தில்லுமுல்லுகளை படம் போட்டு காட்டி, எதனால் கவின், அம்ர்தா பலிஆடுகளாக ஆக்கப்படுகிறார்கள் என்பதை நம்பகத்தன்மையோடு மையப்படுத்தி த்ரில்லிங்காக இயக்கியிருக்கிறார் வினித் வரபிரசாத். ஹாட்ஸ் ஆஃப்.

மொத்தத்தில் ஹேப்சி தயாரித்த லிப்ட் படம் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்து த்ரில்லிங்கில் கிங் மேக்கராக வலம் வந்து வெற்றியை தேடித்தரும்.