ராதேயின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பூஜ்ஜியம் – 40 கோடியை விட்டுத் தந்த சல்மான் கான்!

0
8

ராதேயின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பூஜ்ஜியம் – 40 கோடியை விட்டுத் தந்த சல்மான் கான்!

2009-ம் ஆண்டு வாண்டட் படத்தின் மூலம் சல்மான் கான் – பிரபுதேவா கூட்டணி முதல்முறையாக இணைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சல்மான் கான் பிரபுதேவா இயக்கத்தில் தபாங் 3 வெளியானது. இந்தப் படம் வெற்றி பெறவே மீண்டும் மூன்றாவது முறையாக இருவரும் ராதே படத்தில் இணைந்தார்கள். இந்தப் படத்தில் சல்மான் கான் உடன் திஷா பதானி, ஜாக்கி ஷெராப், பரத், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

கடந்த ஆண்டு மே மாதமே திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. மே 14-ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகும் அதேநாளில் ஜீ ப்ளெக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மே 14 வெளியாவதாக இருந்த ராதே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால், முன்பு பேசிய தொகையில் 40 கோடிகளை விட்டுத் தந்துள்ளார் சல்மான்.

வசூல் விஷயத்தில் இந்தியின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். அதிக 200 கோடி படங்கள் தந்தவர். பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் நடித்த ராதே படத்தை ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், படம் திரையரங்கில் வெளியாகாது, மன்னிச்சிக்கோங்க என்று அறிவித்துள்ளார் சல்மான். “ராதேயின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ஸீ ரோ. என்னுடைய படங்களில் இதுவே மோசமான பாக்ஸ் ஆபிஸ்” எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ராதே படத்தை ரம்ஜானை முன்னிட்டு மே 14 வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஒரே நாளில் திரையரங்கு, ஓடிடி, டிடிஹெச் என மூன்றுவித வெளியீட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கொரோனா இரண்டாம் அலை அனைத்தையும் கலைத்துப் போட்டது.

இந்தியாவில் கொரோனா தொற்று குறைவாக உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே படம் திரையரங்கில் வெளியாகும். வெளிநாடுகளிலும் வழக்கத்தைவிட குறைவான திரையரங்குகளில் படம் வெளியாகும். டிடிஹெச் இணைப்பு வைத்திருப்பவர்கள் 299 ரூபாய் கட்டி ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். ஸீ ஓடிடி தளத்திலும் இதே முறையில் பணம் கட்டி பார்க்கலாம்.

சல்மான் கான் ராதே படத்தின் திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமைகளை ஸீ நிறுவனத்துக்கு 230 கோடிகளுக்கு அளித்திருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், 40 கோடிகள் குறைத்து 190 கோடிகளுக்கு டீல் முடிவாகியுள்ளது. பட வெளியீட்டு தேதி மற்றும் பிற விவரங்கள் குறித்து முறைப்படியான அறிவிப்பை சில தினங்களில் எதிர்பார்க்கலாம்.