ராதாரவி வசனத்துல கரெக்சன் பண்ணினாரு… ஒரு இயக்குனரா என்னால அதை அப்படியே ஏத்துக்க முடியல… புளூ சட்டை மாறன்

0
104

ராதாரவி வசனத்துல கரெக்சன் பண்ணினாரு… ஒரு இயக்குனரா என்னால அதை அப்படியே ஏத்துக்க முடியல… புளூ சட்டை மாறன்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து அற்புதமான கானா பாடல்களை பாடவைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் புளூ சட்டை மாறன் பேசும்போது, “இந்தப்படத்துல ஜெயராஜ்னு நிஜமான ரவுடி ஒருத்தரை முக்கியமான வேடத்துல நடிக்க வச்சிருக்கேன்.. இந்தப்படத்தோட ட்ரெய்லர் வெளியான பின்னாடி அவருக்கு ஏழு படம் புக் ஆகிருக்கு.

விஜய் டிவி புகழ் பாலா ஒருமுறை ஏதேச்சையா என்ன சந்திச்சப்ப வாய்ப்பு கேட்டிருந்தார். இந்தப்படத்துல அவருக்கு நல்ல கேரக்டர் ஒன்னு இருந்தது. அதனால அவரை கூப்பிட்டு நடிக்க வச்சேன்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினம் லேட்டாவே வந்துக்கிட்டு இருந்தாரு.. ஏழு மணிக்கு வரச்சொன்னா எட்டு மணிக்கு வர்றாரேன்னு கடுப்பாகி, தம்பி நீ பின்னால சிம்பு மாதிரி பெரிய ஆளா வருவப்பா அப்படின்னு சொன்னேன்.. ஆனா அவரை ஒன்பது மணிக்குத்தான் வரச்சொல்லி இருக்காங்க.. ஆனா அவரு எட்டு மணிக்கே வந்துருக்கார்னு அப்புறம் தான் தெரிஞ்சது,.

இந்தப்படத்துல ராதாரவி சார் நடிச்சாத்தான் நல்லா இருக்கும்னு அவருகிட்ட மூணு தடவை போய் கதை சொன்னேன். அவரும் ஒத்துக்கிட்டாரு.. படம் பார்க்கிறதுக்கே லைவா இருக்கணும்கிறதால அவரையும் இயல்பா காட்டணும்னு சில விஷயங்களை செய்ய சொல்லி அவர்கிட்ட சொன்னேன். அதுக்கு அவரு, அப்படின்னா முதலிரவு காட்சியையும் அப்படித்தான் லைவா பண்ணுவியான்னு சிம்பிளா ஒரு கேள்வி கேட்டார் நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்..

ஆனா நான் சொன்னபடி நடிக்க ஒத்துக்கிட்டாரு. அதேசமயம் ஷூட்டிங் ஸ்பாட்டுல அவரோட வசனத்துல கரெக்சன்லாம் பண்ணினாரு.. ஒரு இயக்குனரா என்னால அதை அப்படியே ஏத்துக்க முடியல.. அதனால நீ சொன்ன மாதிரியும் எடுத்துக்க.. நான் கரெக்சன் சொன்ன மாதிரியும் எடுத்துக்க, உனக்கு எது சரியா படுதோ அதை பயன்படுத்திக்க அப்படின்னு சொன்னாரு.. அவரு சொன்ன மாதிரி ரெண்டு விதமாவும் எடுத்துட்டு, படத்தை எடிட் பண்ணும்போது ரெண்டையுமே மிக்ஸ் பண்ணி பயன்படுத்திட்டேன்.. ரொம்பவே நல்லா வந்திருக்கு

சென்னையில இருக்குற திறமையான கானா பாட்டு இளைஞர்களை இதுல நடிக்க வச்சிருக்கேன்.. சார்பட்டா பரம்பரை படத்துக்கு பின்னாடி, இந்தப்படத்துல சின்னச்சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கிற நடிகர்கள் கூட ரசிகர்களால பெரிசா கவனிக்கப்படுவாங்க” என்றார்.