முன்னா விமர்சனம்

0
17

முன்னா விமர்சனம்

சாட்டையடி கூத்து நடத்தும் நாடோடி கும்பலில் பிறந்த முன்னா, அந்த கும்பலில் இருந்து விலகி காது குடையும் வேலையை செய்து வருகிறார். இதனால் நாடோடி கும்பலிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு தனியாக வாழ்கிறார். பணம் சம்பாதித்து கோடீஸ்வரனாக வேண்டும் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தாலும் கை கூடாமல் போகிறது. ஆனால் அதிர்ஷ்டம் லாட்டரி சீட்டுவழியாக கதவைத் தட்ட 2 கோடி பணம் முன்னாவிற்கு கிடைக்கிறது. வீடு, கார் என்று வாங்கும் முன்னா தன் பெற்றோரை அழைக்க அவர்கள் வர மறுத்துவிடுகின்றனர். இதனால் தனிமையில் வாடும் முன்னாவிற்கு பெண் பார்த்து நண்பர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தால் முன்னா சந்தோஷமாக வாழ்ந்தாரா? இதனால் அவர் இழந்தது என்ன? கொலைகாரனாக மாறி வாழ்க்கையை இழந்தது என்ன? என்பதே படத்தின் கதை.

சங்கை குமரேசன், நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, கென்னடி, சண்முகம், வெங்கட் மற்றும் பலரின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்துள்ளனர்.

இசை-டி.ஏ.வசந்த், பின்னணி இசை-சுனில் லாசர், ஒளிப்பதிவு-ரவி ஆகிய மூவரும் முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர்.

உழைக்காமல் அதிர்ஷ்டத்தை நம்பி வந்த பணம் வந்த வழியே போய்விடும் என்பதும் அது பல துன்பங்களை தந்து துயரத்தில் ஆழ்த்திவிடும் என்பதை சொல்லி, குலத்தொழிலை ஏளனம் செய்யாமல் அதை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என்று தன்னால் முடிந்த வரை சிறிய பட்ஜெட் படத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கும் இயக்குனர் சங்கை குமரேசனுக்கு கை தட்டல் தரலாம்.
மொத்தத்தில் ஸ்ரீதில்லை ஈசன் பிச்சர்ஸ் சார்பில் ராமுமுத்துச்செல்வன் தயாரித்திருக்கும் முன்னாவின் முயற்சி இன்னும் பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது.