முதல் நாளே படப்பிடிப்பை கட் அடித்த உதயநிதி ஸ்டாலின்

0
131

முதல் நாளே படப்பிடிப்பை கட் அடித்த உதயநிதி ஸ்டாலின்

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி ஸ்டாலின் , தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘ராதே ஷ்யாம் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

ராதே ஷியாம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். ரெட் ஜெயண்ட் மூவீஸ் ரிலீஸ் பண்ண எப் ஐ ஆர் படத்தின் சக்சஸ் மீட்டிற்கே என்னால் வரமுடியவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான் நடிக்கும் மாமன்னன் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முதல் நாளே நான் கட் அடித்து விட்டு இந்த விழாவிற்கு வந்து இருக்கிறேன். அந்த அளவிற்கு இந்த படம் எனக்கு முக்கியம். இந்த படம் 2 மாதம் முன்னாடியே பார்த்தேன் அப்போது 3 1/4 மணி நேரம் ஓடியது, படம் ஒவ்வொரு காட்சியும் டிரெய்லர் மாதிரியே பிரமாதமாக இருந்தது. பிரபாஸ் உடைய ஃபேன் நான், பாகுபலிக்கு முன்னாடியே உங்களை பிடிக்கும். பூஜா இங்கு அரபிக்குத்து குத்தினார், இந்தப்படத்திலும் கலக்கியிருக்கிறார். சத்யராஜ் சார் ஒரு வித்தியாசமான ரோல் செய்துள்ளார். கடைசி காட்சியில் ஒரு அட்டகாசமான ஃபைட் இருக்கிறது. ராதே ஷ்யாம் திரைப்படத்தை மார்ச் 11 ஆம் தேதி 175 திரையங்களில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரமாண்டமாக வெளியிடுகிறோம். என்றார்.