மக்களை கவர தவறிய பொன் மாணிக்கவேல் – விமர்சனம்

0
129

மக்களை கவர தவறிய பொன் மாணிக்கவேல் – விமர்சனம்

ஜாபக் மூவீஸ் தயாரிப்பில் ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெதுராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படம் ‘பொன்மாணிக்கவேல்’. படத்திற்கு இசை டி.இமான், ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ்.

சென்னை கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓர் பங்களாவில் உயர் நீதிமன்ற நீதிபதி கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலை யாரால் நிகழ்த்தப்பட்டது. ஏன் நிகழ்த்தப்பட்டது? என்பவற்றை விசாரிக்க ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியும் துப்பாக்கி நிபுணருமான பொன் மாணிக்கவேலிடம் (பிரபுதேவா) கொடுக்கப்படுகிறது. அந்தக் கொலை குற்றத்தை அவர் விசாரிக்க விசாரிக்க பல திருப்பங்கள்..முடிவில் குற்றவாளி யார்? குற்றம் ஏன் நடந்தது என்பதே மீதிக்கதை

பொன் மாணிக்கவேலாக பிரபுதேவா. காவல்துறை அதிகாரியாக அவரது தெனாவாட்டான உடல் மொழி பல இடங்களில் போக்கிரி விஜய்யை நியாபகப்படுத்துகிறார்.

நிவேதா போலீஸ் ஹீரோவுக்கு மனைவி, கொடுத்த கேரக்டருக்கு நியாயமும் சேர்த்திருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லன் சுரேஷ் மேனன் படத்தின் வேகத்திற்கு பயன்பட்டிருக்கிறார்.

மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு சரியான கதாபாத்திரம்.

இமானின் இசையும், பின்னணி இசையும் ஓகே.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு அருமை.

வலு இல்லா கதை மற்றும் சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை, குறைந்தது 10 வருடங்களுக்கு முன் வர வேண்டிய படம் போன்ற உணர்வைத் தருகிறது முகில் செல்லப்பன் இயக்கிய பொன்மாணிக்கவேல்.

மொத்தத்தில் ஓடிடியில் ரிலீஸாகியுள்ள பொன் மாணிக்கவேல் மக்களை கவர தவறிவட்டது.