பொங்கலுக்கு வெளியாகும் துணிவு, வாரிசு படத்தின் FDFS டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் ‘சூது’ இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை! விளாசும் பா.ஜ.க தலைவர்

0
632

பொங்கலுக்கு வெளியாகும் துணிவு, வாரிசு படத்தின் FDFS டிக்கெட் விலை இத்தனை ஆயிரமா? ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் ‘சூது’ இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை! விளாசும் பா.ஜ.க தலைவர்

அஜித்தின் துணிவு படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளது.

முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்துக்கு உள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் இவர்களுக்கு தீவிர ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் தான் பொங்கலையொட்டி தமிழ்நாட்டில்ள விஜய், அஜித் ஆகியோர் நடித்த படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளன. இதற்கு முன்பு வீரம், ஜில்லா படங்கள் ஒன்றாக நேருக்கு நேர் மோதிய நிலையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய், அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வருகின்றன.

அதன்படி இயக்குனர் எச்.வினோத் இயக்கிய நடிகர் அஜித்தின் ‛துணிவு’ படமும், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‛வாரிசு’ திரைப்படமும் 11ம் தேதி ஒன்றாக திரைக்கு வர உள்ளது. இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே தான் வாரிசு, துணிவு படங்களின் போஸ்டர்கள், டிரெய்லர்கள் உள்பட அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி இணையத்தை கலக்கி டிரெண்ட்டிங்கில் இடம்பிடித்து வருகின்றன.

ஒரே தேதியில் துணிவு, வாரிசு படங்கள் திரைக்கு வந்தாலும் கூட ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டை வாங்கி வருகின்றனர்.

ரிலீசுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இரு படங்களுக்கு திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிகாலை 1 மணி காட்சியெல்லாம் திரையிடப்பட உள்ளதால், ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே முதல் ஷோ டிக்கெட் தாறுமாறான விலைக்கு விற்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் வாரிசு மற்றும் துணிவு படத்தின் FDFS டிக்கெட் விலையெல்லாம் கேட்டால் தலைசுற்றிவிடும். அந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் முதல் ஷோ ஒரு டிக்கட்டின் குறைந்த விலை ரூபாய் ஆயிரம் முதல் அதிகபட்சமாக  டிக்கெட் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல தியேட்டர்களில் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் புகார் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். மறுபுறம் அதிக விலைக்கு படத்தின் டிக்கெட்டுகளை  வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறதாம்.

இந்நிலையில், இந்த விஷயம் அறிந்த தமிழக பா.ஜ.க’வின் துணை தலைவர் நாரயானன் திருப்பதி ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “பொங்கலன்று வெளியாகும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ள படங்களின் டிக்கெட்டுகள் வெளிப்படையாக ரூபாய்.1000 முதல் ரூபாய் 3000 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த சட்ட விதி மீறல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவகாரம். பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் ‘சூது’ இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை.

இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மாநில அரசினுடையது. சட்ட விரோதமாக செயல்படும் இந்த ஒட்டுமொத்த அமைப்பை முடக்குவதோடு, திரைப்பட மாஃபியாக்களை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது. ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதோடு, தமிழக காவல் துறை கை கட்டி. வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சுரண்டும் கேவலமான அராஜகம் இது. சூதை ஒழிக்கப்போவதாக முழங்கி கொண்டிருக்கும் அரசின் கொடூர முகத்தை நட்டநடு நிசி 1 மணிக்கு படங்களை திரையிட அனுமதியளித்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்  நிறுவனமே,  இந்த படங்களின்  விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது. பல்வேறு விவகாரங்களை தானாகவே முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்றம்,  இந்த சூதை, பகல் கொள்ளையை, அரசின் அத்துமீறலை, சட்ட விரோத நடவடிக்கையை, அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் மாநில திமுக அரசை கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் கொள்ளையர்களின் அட்டகாசம் மேலும் பெருகி கொண்டே இருக்கும் என நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

https://mobile.twitter.com/narayanantbjp/status/1612281135412936705

https://mobile.twitter.com/narayanantbjp/status/1612133585292783618