பேய் இருக்க பயமேன் விமர்சனம்

0
66

பேய் இருக்க பயமேன் விமர்சனம்

புதுமணச் N;ஜாடிகளான கார்த்தீஸ்வரன், காயத்ரி இருவரும் விருப்பமில்லாத திருமணத்தால் எப்போதும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள தனி பங்களாவிற்கு சில மாதங்கள் பெற்றோர்அனுப்பி வைக்கின்றனர். அங்கே தனித்தனி அறையில் தங்கும் இருவரையும் ஜோடிப் பேய்கள் பயமுறுத்தி அலற வைக்கின்றது. இதனால் மனம் ஒத்து போகாத இருவரும் பேய்களுக்காக ஒன்றாக இருக்க பழக்கபடுத்திக்கொள்கின்றனர்.பேய்களை விரட்டவும் ஆட்களை வரவழைத்து தோல்வி அடைகின்றனர். இவர்களாலும் அந்த பங்களாவை விட்டு வெளியேற பேய்கள் விடுவதில்லை. இதனால் புதுமணச் ஜோடிகள் இணையதளத்தில் பேய் இருந்தால் பயப்படகூடாது என்ற வீடியோ ஒன்றை பாhக்க நேரிடுகிறது. அதில் பேய்களை பார்த்து பயப்படவேண்டாம், நட்பாக பழகினால் பணிந்துவிடும் என்பதையறிந்து அதன்படி பேய்களை கண்டு பயப்படாமல் தங்கள் வசப்படுத்துகின்றனர். பேய்களும் இவர்களிடம் நட்பாக பழகி இவர்களின் சண்டையை பார்த்து சமாதனப்படுத்தி காதல் செய்ய வைக்கிறது. இந்த சமயத்தில் பேய்களை விரட்ட நெல்லை சிவா வருகிறார். அதன் பின் கார்த்தீஸ்வரனும், காயத்ரியும் பேய்களை விரட்டினார்களா? பேய்களின் நிலைமை என்னவானது? என்பதே க்ளைமேகஸ்.

புதுமணத்தம்பதிகளாக கார்த்தீஸ்வரன்-காயத்ரி காமெடி கலந்த சண்டைகளில் மணம் ஈர்க்கிறார்கள். அர்ஜூன்-நியதி பேய் ஜோடிகள் காதலையும்,ஆதாங்கத்தையும் தெரியப்படுத்தி மனதை வெல்கிறார்கள். இவர்களுடன் கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா,  அபிராம் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு சிறப்பு கூட்டுகிறது.

ஒளிப்பதிவு-அபிமன்யு, இசை-ஜோஸ் பிராங்கிளின் இருவரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது.

ஜி.பி.கார்த்திக்ராஜா படத்தொகுப்பு முதல் பாதியில் கோட்டை விட்டுவிட்டார்.

பேய்களும், மனிதர்களும் ஒரே வீட்டில் இருந்தால் ரணகளமாக காட்சியளிப்பதை காமெடி கலந்து பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதில் பேய்களை அவர்கள் வழியிலேயே சென்று கலாய்த்து, பயமுறுத்தி தன்வசப்படுத்தி நட்பாக பழகி பணிய வைக்கும் முயற்சியில் மனிதர்கள் வென்றார்களா? என்பதை முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சிறப்பாகவும், யதார்த்தமாகவும், அனைவரும் ரசிக்கும் வண்ணம் புது கோணத்தில் கொடுத்து அசத்திவிடுகிறார் இயக்குனர் கார்த்தீஸ்வரன். முதல் காட்சியில் பேய்கள் கடித்து பேயாக மாறும் மனிதர்கள் என்ன ஆனார்கள்? அதன் பின் என்னவானது? என்பதை தெளிவுபடுத்த மறந்து விட்டார் இயக்குனர்.

பேய் இருக்க பயமேன் பயப்படாமல் பார்க்கலாம்.