பிரித்விராஜுக்கு ஜோடியாகும் நயன்தாரா

0
2

பிரித்விராஜுக்கு ஜோடியாகும் நயன்தாரா

’பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ’லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ படத்தில் நடித்த நடிகை நயன்தாரா அடுத்ததாக சமீபத்தில் வெளியான ‘நிழல்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்னரே ’நேரம்’, ’பிரேமம்’ பட புகழ் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோவாக பிரித்விராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிக்கிறார். வரும் செப்டம்பரில் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.