பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்

0
7

பிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்

பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான பாண்டு கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.
74 வயதான நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்றின் காரணமாக அவரது மனைவி குமுதாவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்னத்தம்பி, காதல்கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் சிறப்பான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் நடிகர் பாண்டு.

நடிகர் பாண்டு சிறப்பான ஓவியராகவும் இருந்தவர். அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான். திறமைமிக்க ஓவியரான பாண்டு, கேப்பிட்டல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி, நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகையை அழகுற வடிவமைத்துள்ளார்.