படுக்கையறை காட்சியில் நடிக்க மாட்டேன்! இயக்குனர் சரவணசுப்பையா – நடிகை அனகா மோதல்!!

0
89

படுக்கையறை காட்சியில் நடிக்க மாட்டேன்!
இயக்குனர் சரவணசுப்பையா – நடிகை அனகா மோதல்!!

அஜித் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷரவண சுப்பையா. இதில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு ஷாம், சினேகா, அபர்ணா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த ‘ஏபிசிடி’ படத்தை இயக்கியிருந்தார். இதுவும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்கத்திலிருந்து விலகி முழுக்க நடிப்பிலேயே கவனம் செலுத்த தொடங்கினார் ஷரவண சுப்பையா.

பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கத்துக்குத் திரும்பியுள்ளார் ஷரவண சுப்பையா. ‘மீண்டும்’ என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் கதிரவன், அனகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படக்குழுவினர் கடல் பகுதியில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு ஆளாகி உள்ளனர். படத்தின் நாயகன் கதிரவன், இயக்குனர் சரவண சுப்பையா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இலங்கை கடற்படையால் அரஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு தடைகளை தாண்டி உருவாக்கியுள்ள மீண்டும் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பொதுவாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து அட்டூழியம் செய்து வரும் நிலையில் மீண்டும் படக்குழுவினரும் அவர்களது அட்டூழியத்திற்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பெண் – இரு கணவரா?

மீண்டும் படத்தில் கதாநாயகிக்கு இரண்டு கணவர்கள் இருப்பது போன்று சர்ச்சை்க்குரிய காட்சிகள் படமாக்கப் பட்டிருப்பதை அறிந்த மாதர் சங்கங்கள் இயக்குநர் சரவணசுப்பையாவுக்கும், தயாரிப்பாளர் மணிகண்டனுக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்கள். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் இயக்குனர் சரவணசுப்பையாவிற்கும் நடிகை அனகாவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

கதைப்படி கொடைக்கானலில் முதலிரவு  படுக்கையறை பாடல் காட்சியை கவர்ச்சியாக நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அனகா நடித்து முடித்ததும் படுக்கையறை காட்சியை பாடலில் பயன்படுத்தக்கூடாது என்று இயக்குநர் சரவணசுப்பையாவிடம் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு நிலவியது, சூழலை புரிந்து கொண்டு அந்தக் காட்சியை குறைத்துக் கொண்டார் இயக்குனர் சரவணசுப்பையா.