பகவதி பாலா இயக்கத்தில் புதுமுகங்களின் அணிவகுப்பில் “இளம் ஜோடி” வீரத்துடன் இளமை துள்ளும் படம்

0
31

பகவதி பாலா இயக்கத்தில் புதுமுகங்களின் அணிவகுப்பில் “இளம் ஜோடி” வீரத்துடன்
இளமை துள்ளும் படம்

திருமதி. மஞ்சுளா கிருஷ்ணப்பா வழங்க சி. எம்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில்  ஓசூர் கிருஷ்ணப்பா தயாரித்துள்ள படம்தான் ” இளம் ஜோடி”

புதுமுகங்கள் விஜய்கிருஷ்ணப்பா , பிரியங்கா ஜோடியுடன் அனுகிருஷ்ணா, ஆதிஷ் பாலா, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், பெஞ்சமின, வைகாசி ரவி, கர்ணா ராதா, ஜூனியர் அசோகன், போண்டாமணி, அம்பானி சங்கர், புரோட்டா முருகேசு, பட்டு மாமி ஆகியோருடன் பகவதி பாலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மக்கள் தொடர்பு விஜயமுரளி, கிளாமர் சத்யா.தீப்பொறி நித்யா சண்டைப் பயிற்சியையும், தஷி இசையில் சுதந்திரதாஸ், கவிதா குப்புசாமி, ஏகம்பவாணன் பாடல்களையும், ராம்நாத் படத்தொகுப்பையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

” இளம் ஜோடி” படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவையும் கவனித்து, படத்தையும் இயக்கியுள்ள பகவதி பாலா படத்தைப் பற்றி கூறியதாவது, ” பணம்படைத்தவர்கள் மத்தியில் ஜாதியும் மதமும் கைகோர்த்து சிரிக்கிறது.  பணம் இல்லாதவர்களிடம்தான் இந்த ஜாதியும் மதமும் அரிவாள், வேல்கம்பு கொண்டு அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகிறது என்பதை வீரம் கலந்த  இளமை துள்ளலுடனும், அனல் தெறிக்கும் வசனத்துடனும், விறுவிறுப்பான சண்டை காட்சிகளுடனும், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் பெங்களூரில் இந்தப் படத்தை வளர்த்துள்ளோம்.” என்று பகவதி பாலா கூறியுள்ளார்.