நிஜத்தில் சாதியை யாரும் பேசுவதில்லை சினிமாவில் தான் சாதியை பற்றி பேசி, சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுக்கிறார்கள் – இயக்குநர் R.V. உதயகுமார்

0
76

நிஜத்தில் சாதியை யாரும் பேசுவதில்லை சினிமாவில் தான் சாதியை பற்றி பேசி, சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுக்கிறார்கள் – இயக்குநர் R.V. உதயகுமார்

முதல் மனிதன் படத்தில் ஒரு வித்தியாசமான பாடல் இயக்குநரே எழுதியுள்ளார் அருமையான பாடல். ஒரு அற்புதமான படத்தை தந்துள்ள இயக்குநருக்கு என் வாழ்த்துக்கள்.

இப்போது நிஜத்தில் சாதியை யாரும் பேசுவதில்லை சினிமாவில் தான் சாதியை பற்றி பேசி, சும்மா இருக்கும் சங்கை ஊதிக்கெடுக்கிறார்கள். அதற்கு தேசியவிருதும் கொடுத்துவிடுகிறார்கள். இதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஏற்றதாழ்வு என்பது பணம், காசில் வருவதில்லை. புகழ்பெற்றவன் மற்றவனை இகழ்வாக நடத்துவதிலேயே அது ஆரம்பித்து விடுகிறது. அதை முதலில் மாற்றுங்கள். அதைத்தான் இந்தப்படம் பேசுகிறது.

நாம் தான் ஜாதியை கண்டுபிடித்து நாமே ஏற்றதாழ்வை பிரிவினையை உருவாக்கி, ஜாதி இல்லை என்று இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

இங்கு வந்துள்ள அரசியல் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள், இனிமேல் பள்ளியில் சேரும்போது, சாதியை சான்றிதழில் போடக்கூடாது என சட்டம் போடுங்கள், என்ன மதம் என்று மட்டும் போடுங்கள் பிரச்சனை தீர்ந்து விடும், இப்படத்திற்கு அனைத்து ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்யுங்கள் நன்றி.