தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைய காரணமாக இருந்த சூர்யாவின் நன்கொடை !

0
79

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைய காரணமாக இருந்த சூர்யாவின் நன்கொடை !

கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார் . அந்த தொகையை தற்போது திரு கே ஆர் , திரு K. முரளிதரன் , திரு KJR ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம்  மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி தெரிவித்துள்ளார்.