தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பிப்ரவரியில் வெளியீடு?

0
7

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ பிப்ரவரியில் வெளியீடு?

கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கினார். தனுஷின் 40 வது படமான இப்படத்தின் ‘ரகிட ரகிட ரகிட’ பாடல் தனுஷ் பிறந்த நாளையொட்டி ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி வைரல் ஹிட் அடித்தது.

அதற்கடுத்ததாக, தீபாவளியையொட்டி ‘புஜ்ஜி’ பாடல் வெளியிடப்பட்டது. சமீபத்தில், ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் வெளியாகிறது என்று தகவல் வெளியானதை மறுத்திருந்தார்,அதன் தயாரிப்பாளர் சசிகாந்த்.

இந்நிலையில், படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி காதலர் தினத்திற்கு முன்பாக வெளியிடப்படுகிறது என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.