தண்ணி வண்டி விமர்சனம்: தண்ணி வண்டி வேறுவித போதை அடிமையால் அள்ளாடும் தள்ளுவண்டி

0
66

தண்ணி வண்டி விமர்சனம்: தண்ணி வண்டி வேறுவித போதை அடிமையால் அள்ளாடும் தள்ளுவண்டி

ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி சரவணா தயாரித்து உமாபதி ராமையா, சம்ஸ்க்ரிதி, தம்பி ராமையா, பால சரவணன், வினுதாலால், வித்யூலேகா, தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுரைமுத்து, முல்லை கோதண்டம், ஆடுகளம் நரேன், சரண்ராஜ், மனோஜ்குமார், பாவா லட்சுமணன், காதல் சுகுமார், பிச்சைக்காரன் மூர்த்தி, திண்டுக்கல் அலேக்ஸ், மதுரை தமிழ், அப்சல், குணா கந்தசாமி ஆகியோர் நடித்து தண்ணி வண்டி படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாணிக்க வித்யா. எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, மோசஸ் இசையும். எஸ்.என்.அருணகிரியின் பின்னணி இசையோடு ஏ.எல்.ரமேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.மக்கள் தொடர்பு மௌனம் ரவி, மணவை புவன்.

மதுரையில் வண்டியில் தண்ணீர் கொண்டு செல்லும் வேலை செய்யும் சுந்தர மகாலிங்கம் (உமாபதி). அதே பகுதியில் பவர் லாண்டரி கடை நடத்துபவர் தாமினி (சம்ஸ்ருகிதி) இருவரும் காதலர்கள்.அதே ஊரில் புதிதாக பிரேமா சங்கரன் (வினுதா லால) ஆர் டி ஓ அதிகாரியாக பொறுப்பேற்கும் கண்டிப்பான பெண் அதிகாரி. தப்பு செய்பவர்களை உடனே தண்டனை கொடுக்கும்  வேகம் பிரேமா சங்கரன் மக்களை கவர அவரை முன்மாதிரியாக எல்லோரும் பேசும் அளவிற்கு புகழ் கூடுகிறது. அதே சமயம் அவரின் இன்னொரு இருண்ட வாழ்க்கையை தாமினி பார்க்க நேரிடுகிறது. அதனால் தாமினியை போட்டுத்தள்ள துடிக்கும் பிரேமா போடும் திட்டம் என்ன? பிரேமாவிற்கு உதவும் நபர்கள் யார்? அவர்களை வைத்து தாமினியை பழி வாங்கினாரா? தாமினி இவர்களிடமிருந்து தப்பித்தாரா? காதலர் சுந்தர மகாலிங்கம் தாமினியை எப்படி காப்பாற்றினார்? என்பதே க்ளைமேக்ஸ்.

சுந்தர மகாலிங்கமாக உமாபதி ராமையா, காதலி தாமினியாக சம்ஸ்க்ரிதி, தந்தை சதாசிவமாக தம்பி ராமையா, நண்பன் கணேஷாக பால சரவணன், பிரேமா சங்கரனாக வினுதாலால், சகோதரி லாவண்யாவாக வித்யூலேகா, சித்தி வசந்தியாக தேவதர்ஷினி, கணேஷின் தந்தை சுப்ரமணியாக ஜார்ஜ், முருகனாக மதுரைமுத்து, முல்லை கோதண்டம், ஆடுகளம் நரேன், சரண்ராஜ், மனோஜ்குமார், பாவா லட்சுமணன், காதல் சுகுமார், பிச்சைக்காரன் மூர்த்தி, திண்டுக்கல் அலேக்ஸ், மதுரை தமிழ், அப்சல், குணா கந்தசாமி மற்றும் பலர் படத்திற்கு முக்கிய பங்களித்து கதையை நகர்த்த உதவியுள்ளனர்.

எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவை சிறப்பாக செய்து பாடல் காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார். ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது.

மோசஸ் இசையும், எஸ்.என்.அருணகிரியின் பின்னணி இசையும் பரவாயில்லை ரகம்.

மனிதர்களின் வாழ்க்கையில் வெளியுலகில் சிறந்தவர்களாக காட்டிக்கொண்டு, பின்னணியில் பலர் மோசமாகவும், ஒழுக்கமில்லாதவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதையும் பணம், மது, மாது, செக்ஸ் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு போதை அதை சித்தரித்து திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் மாணிக்க வித்யா. முதலில் சாதாரண காதல் கதையாக பயணிக்க அதன் பிறகு அரசாங்க அதிகாரியின் செக்ஸ் லீலைகளை சொல்லி அதில் கொலை, சதி, பழிக்கு பழி என்று கதைக்களத்தை தன்னால் முடிந்த வரை காமெடியாகவும், ஜனரஞ்சகமாகவும், க்ரைமாகவும் எழுதி இயக்கியிருக்கிறார் மாணிக்க வித்யா.

மொத்தத்தில் ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ் சார்பில் ஜி சரவணா தயாரித்திருக்கும் தண்ணி வண்டி வேறுவித போதை அடிமையால் அள்ளாடும் தள்ளுவண்டி.