சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்: அனைத்து தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி மனதைக் கவரும்

0
64

சில நேரங்களில் சில மனிதர்கள் விமர்சனம்: அனைத்து தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி மனதைக் கவரும்

ஏஆர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்து அசோக்செல்வன், ரியா, மணிகண்டன், அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே.எஸ்.ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமா குமார் ஆகியோர் நடிக்க சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விஷால் வெங்கட். இசை-ரதன், ஒளிப்பதிவு-மெய்யந்திரன்.கே, எடிட்டிட்-பிரசன்னா ஜி.கே, வசனம்-மணிகண்டன்.கே, கலை இயக்குனர்-ஏ.பெலிக்ஸ் ராஜா, மனோஜ்குமார், நடனம்-தினேஷ், ஸ்ரீகிரிஷ், பாடல்கள்-சினேகன், ஆர்.ஜெ.விஜய், மாதேவன், ராகேண்டு; மௌலி, எம்.சி.சேத்தன், உடை-பிரியா ஹரே, பிரியா கரன், பிஆர்ஒ-நிகில்.

நாசரின் கோபக்கார மகன் அசோக்செல்வன் தனியார் செல்போன் கம்பெனியில் வேலை செய்கிறார். திருமணம் நிச்சயத்தித்த நிலையில் திருமண பத்திரிக்கை உறவினர்களுக்கு கொடுக்க மகன் அசோக்செல்வனை அழைக்கிறார் நாசர். இதற்கு மறுப்பு தெரிவித்து வேலைக்கு சென்று விடுகிறார் அசோக்செல்வன். ஆனால் இந்த தருணம் தான் தன்னுடைய வாழ்க்கையையும், மற்றவர்களின் வாழ்க்கையும் புரட்டி போடும் சம்பவம் நடைபெறபோகிறது என்பதை அறியாமல் செல்கிறார். புதுமுக நடிகர் அபிஹாசன் பிரபலமான இயக்குனரான தந்தையின் நிழலில் வாழ பிடிக்காமல் தானே சொந்த காலில் நின்று சாதிக்க முடியும் என்று தந்தையை மதிக்காமல் எடுத்தெரிந்து பேசும் குணம் கொண்டவர். இவரில் முதல் பட இசைவெளியீட்டு விழாவில் நடந்து கொண்ட செய்கையால் அனைவராலும் வெறுக்கப்பட்டு தலைப்புச் செய்தியாகிறார்.  வழியில் நடக்கும் விபத்தால் சம்பந்தமேயில்லாமல் தொடர்பு படுத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்குகிறார். பிரவீன் ராஜா அமெரிக்க வேலையில் சேர ஆர்வமாக இருக்க, எதிர்பாராத விதமாக விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பித்து செல்கிறார். தனியார் தங்கும் விடுதியில் அறை பராமரிக்கும் மேற்பார்வையாளர் தன் திறமைக்கு ஏற்ற பெரிய வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இருப்பவர். இவர்கள் அனைவரும் நாசரின் விபத்துக்கு காராணகர்த்தாவாக ஏதாவது ஒரு தருணத்தில் சம்பந்தப்பட இவர்களின் வாழ்க்கையில் அந்த துயர சம்பவம் நடைப்பெற்ற பிறகு ஏற்படும் பாதிப்பு எத்தகைய மாற்றத்தை அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிய வைத்திருக்கும் கதைக்களம்.

அசோக்செல்வன், ரியா, மணிகண்டன், அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே.எஸ்.ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா, அனுபமா குமார் என்று அனைவருமே ஒருவருடைய செயல் மற்றவர்களை தொடர்புடையதாக தங்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து படத்தின் விறுவிறுப்பை குறையிவிடாமல் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இசை-ரதன், ஒளிப்பதிவு-மெய்யந்திரன்.கே இருவருமே கதைக்களத்திற்கேற்ற இசையையும், காட்சிக்கோணங்களையும் அச்சு அசலாக கொடுத்துள்ளனர்.

எடிட்டிங்-பிரசன்னா ஜி.கே, வசனம்- மணிகண்டன் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

சில படங்களின் தலைப்பு கதைக்கு பொறுத்தமாக அமையும் அந்த வகையில் இந்த படத்தின் தலைப்பும் கதையில் நான்கு இளைஞர்களின் வாழ்க்கையில் ஒரு சாலை விபத்து எத்தகைய பேரழிவை ஏற்படுத்தி மனதை வருத்தமடைய செய்து, மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி, உணர்வுகளை பிரதிபலிக்கிறது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். படம் முழுவதும் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் புரியும்படி சொல்லியிருப்பதிலேயே பெரிய வெற்றியை பெற்று விட்டார் புதுமுக அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட். பல காட்சிகள் ஆழத்துடன் பதிவு செய்து, நடந்த பின் வருந்துதல் எத்தகைய கசப்பை உணர வைக்கும் என்பதை படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரே மாதிரியான உணர்வுகளை கடந்து செல்லும் போது, நாம் அவர்களின் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்படி நம் செய்கையை சுயபரிசோதனை செய்வது போல் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன்  தயாரித்திருக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள் அனைத்து தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி மனதைக் கவரும் படம்.