சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் விமர்சனம் : குழந்தைகளுடனும், நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக டைம் பாஸ் என்டர்டெய்னர் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் | ரேட்டிங்: 3/5

0
356

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் விமர்சனம் : குழந்தைகளுடனும், நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக டைம் பாஸ் என்டர்டெய்னர் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் | ரேட்டிங்: 3/5

லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் கே.குமார் தயாரித்து 11:11 புரொடக்ஷன்ஸ் டாக்டர் பிரபு திலக் வெளியீட்டில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ்.ஷா.

இதில் சிவா, மேகா ஆகாஷ், அன்ஜு குரியன், மனோ, பாலா, மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ், சாரா, பக்ஸ், கல்கி ராஜா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- திரைக்கதை-பூபதி செல்வராஜ், வசனம்-ஷிரீனிக் விஸ்வநாதன், ஒளிப்பதிவு- ஆர்தர் வில்சன், இசை-லியோன் ஜேம்ஸ், நடனம் -சான்டி, படத்தொகுப்பு-பூபதி செல்வராஜ், ஃபாஷில், கலை-துரைராஜ், ஒலி-உதயகுமார், பாடல்கள்- கோ ஷேஷா, சண்டை- போனிக்ஸ் பிரபு, ஆடை-டோரதி ஜேய், தயாரிப்பு நிர்வாகி-கோபி தன்ராஜ், தயாரிப்பு மேற்பார்வை-மனோஜ் குமார், மக்கள் தொடர்பு- யுவராஜ்.

கதை:

இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் சிவா ஸ்நிக்கியில் உ⁰ணவு டெலிவரி செய்யும் வேலையை செய்கிறார். மறுபுறம் ஷாரா என்ற விஞ்ஞானி தொழில்நுட்ப சாப்ட்வேர் பயன்படுத்தி மொபைல் ஃபோனை உருவாக்குகிறார். அது தான் சிம்ரன் (மேகா ஆகாஷ்) என்னும் மொபைல் ஃபோன். இந்த மொபைல் ஃபோன் எதிர்பாராத விதமாக சிவாவிடம் கிடைக்கிறது. அதன் பின்பு சிவா வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின் கதை.

கதையின் நாயகனாக வரும் சிவா தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, வழக்கம்போல படம் முழுக்க தனது ஒன் லைன் பஞ்ச் வசனங்கள் மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார். அத்துடன் இன்று டெலிவரி செய்யும் அனைத்து தொழிலாளர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் நகைச்சுவையாக சொல்லிய விதம் பாராட்டத்தக்கது.

சாப்ட்வேர் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் போன் பேசும் பெண் சிம்ரனாக நடித்துள்ள மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி எதிர்பார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் தோன்றும் மனோ சிவாவின் அப்பாவாக தனது நடிப்பால் சிரிப்பை வரவழைத்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

சிம்ரனைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஷாரா, சிவாவின் நண்பனாக மாகாபா ஆனந்த், திவ்யா கணேஷ், அஞ்சு குரியன், பகவதி பெருமாள், பாலா, மொட்டை ராஜேந்திரன், நல்ல தேர்வு. குறிப்பாக இரண்டாம் பாதியில் ஷிவா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் கலக்கியுள்ளனர்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொம்மை சண்டை காட்சிகள், இளைஞர்களையும்9 பெருமளவில் கவரும் காட்சிகளையும் விஷுவலாக ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அருமையாக பதிவு செய்துள்ளார்.

லியோன் ஜேம்ன்ஸின் இசையும், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல அமைந்து வலு சேர்த்துள்ளது.

தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஐபோன் சிரியும் அயனாவரம் ரவியும் என்ற குறும்படத்தை, ஒரு சிம்பிளான கதையை காமெடி கலந்த திரைக்கதையில் போர் அடிக்காமல் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா.

மொத்தத்தில் குழந்தைகளுடனும், நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக டைம் பாஸ் என்டர்டெய்னர் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்.