சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்

0
30

சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த சின்னஞ்சிறு கிளியே திரைப்படம்

ஆங்கில மருத்துவத் துறையின் சீர்கேடுகளைப் பற்றிப் பேசும் ‘சின்னஞ்சிறு கிளியே’ திரைப்படத்திற்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.

செண்பா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘சின்னஞ்சிறு கிளியே’..!

இந்தப் படத்தில் செந்தில்நாதன், சண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை, விக்கிரமாதித்யன், பாலாஜி சண்முகசுந்தரம், குரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பாண்டியன் குப்பன், இசை – மஸ்தான் காதர், படத் தொகுப்பு – கே.டி.குமரேஷ், கலை இயக்கம் – ராஜூ, எழுத்து, இயக்கம் – சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

இப்படம் ஒரு தந்தைக்கும், மகளுக்கான பாசத்தோடு, தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத் துறையில் இருக்கும் மக்கள் விரோதச் செயல்களை வெளிப்படுத்தும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது.

படபிடிப்பு முழுவதும் முடிவடைந்து திரைக்கு வர தயாராக இருக்கும் இப்படம் மக்கள் பார்வைக்கு போவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை வென்று இருக்கிறது.

ட்ருக் சர்வதேச திரைப்பட விழாவில் அவுட் ஸ்டேண்டிங் அக்சீவ்மெண்ட் விருதினை இத்திரைப்படம் பெற்றுள்ளது.

மேலும்…

சிறந்த அறிமுக இயக்குனர் விருது

சிறந்த குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்பட விருது

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர் விருது

சிறந்த இந்திய திரைப்பட விருது

சிறந்த இயக்குனர் ஸ்பெஷல் ஜூரி விருது

போன்ற பல்வேறு விருதுகளை பல்வேறு இன்டர்நேஷனல் பெஸ்டிவலில் வென்றுள்ளது.