கொம்பு வச்ச சிங்கம்டா விமர்சனம்: கொம்பு வச்ச சிங்கம்டா புதிய பாட்டிலில் ஒல்டு வொயினாக அனைவரையும் கவரும்

0
65

கொம்பு வச்ச சிங்கம்டா விமர்சனம்: கொம்பு வச்ச சிங்கம்டா புதிய பாட்டிலில் ஒல்டு வொயினாக அனைவரையும் கவரும்

ரேதான் சினிமாஸ் இந்தர்குமார் வழங்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டியன், மறைந்த இயக்குனர் மகேந்திரன், சூரி, ஹரிஷ் பேராடி, இந்தர்குமார், அபி சரவணன், ராகவ் விஜய், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, தீபா ராமானுஜம், சுந்திரபாண்டியன் துளசி, மருது லீலா பாட்டி, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஸ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஆர். பிராபாகரன்.ஒளிப்பதிவு-என்.கே.ஏகாம்பரம், இசை-திபு நிணன் தாமஸ், எடிட்டிங்-டான் போஸ்கோ, பாடல்-யுகபாரதி, ஜி.கே.பி., அருண் ராஜ் காமராஜ், சண்டை-அன்பறிவு, நடனம்-நந்தா, பிஆர்ஒ-நிகில்.

ஊர்தலைவர் மகேந்திரனின் மகன் சசிகுமார் தன் நண்பர்கள் ஐந்து பேருடன் சாதி மத பேதமின்றி பழகுகிறார். அரசியல்வாதியாக வலம் வரும் ஹரிஷ் பேராடியின் மகள் மடோனா செபாஸ்டியனை சசிகுமார் விரும்ப, இருவர் பெற்றோர்களும் சம்மதிக்கின்றனர். இதனிடையே ஊர் பஞ்சாயத்து தேர்தலில் ஹரிஸ்பேராடியும், இந்திர்குமார் போட்டியிட இதற்காக நண்பர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து வேலை செய்கின்றனர். இந்த தேர்தலின் போது நண்பர் ஒருவர் கொல்லப்பட, இதனால் பகை ஏற்பட்டு சசிகுமார் மற்றும் அவரது நண்பர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. அதன் பின் நண்பர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட, இதற்கு காரணம் யார் என்பதை சசிகுமார் கண்டுபிடித்தாரா? ஊரில் சாதி சண்டையை ஒழித்தாரா? நண்பர்களை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் முடிவு.

சசிகுமார் கிராமத்து கதாபாத்திரம் இவருக்கேன்றே வடிவமைக்கபட்டு இருப்பதால் அதை செவ்வென செய்துவிட்டு போகிறார். அழகு பதுமையாக மடோனா செபாஸ்டியன் முக்கியத்துவம் இல்லாததால் இறுதியில் சிறு உதவி செய்து விட்டு போகிறார்.

முதலில் அமைதியாக அடக்கி வாசிக்கும் ஊர் பெரியவராக தந்தையாக மகேந்திரன் அதன் பின் வில்லத்தனத்தில் இறுதிக் காட்சியில் மிரட்டியுள்ளார். இவர் தான் முக்கிய காரணம் என்பதை படம் நகர நகர புரிந்து கொள்ளலாம்.

மற்றும் சூரி, ஹரிஷ் பேராடி, இந்தர்குமார், அபி சரவணன், ராகவ் விஜய், சந்தோஷ் கிருஷ்ணன், லோகு, தீபா ராமானுஜம், சுந்திரபாண்டியன் துளசி, மருது லீலா பாட்டி, அருள்தாஸ், சங்கிலி முருகன், ஸ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் பக்க மேளங்களாக வந்து போகின்றனர்.

என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, திபு நிணன் தாமஸ் இசை,டான் போஸ்கோவின் படத்தொகுப்பு, அன்பறிவின் சண்டை காட்சிகள் அனைத்துமே கிராமத்து கதைக்களத்கேற்ற வகையில் அமைத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.

பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி சமத்துவம் – சகோதரத்துவம் வர வேண்டும் சாதி சமய மதமற்ற சமுதயாத்தை உருவாக்க வேண்டும் என்று போராடும் ஆறு நண்பர்கள் அவர்களின் நட்பு உடைந்து பகை ஏற்பட்டால் கிராம பிரச்னையாகி, ஊர் பிரச்னையாக முடிய அதிலிருந்து மீண்டு வந்தார்களா? என்பதை திரைக்கதையில் சொல்லி சமூக கருத்தை படம் முழுக்க கொண்டு வர முயற்சி செய்திருப்பதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

மொத்தத்தில் ரேதான் சினிமாஸ் இந்தர்குமார் வழங்கும் கொம்பு வச்ச சிங்கம்டா புதிய பாட்டிலில் ஒல்டு வொயினாக அனைவரையும் கவரும்.