‘கேஜிஎஃப்-2’ படத்தின் போட்டியை தாங்குமா ‘பீஸ்ட்’  தெலுங்கு உரிமையைக் கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்

0
77

‘கேஜிஎஃப்-2’ படத்தின் போட்டியை தாங்குமா ‘பீஸ்ட்’  தெலுங்கு உரிமையைக் கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்

’பீஸ்ட்’ தெலுங்கு உரிமை தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன.

இந்த நிலையில், பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் தெலுங்கு உரிமையை ரூ. 11 கோடிக்கு தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் இணைந்து சுரேஷ் பாபு, ஏசியன் சுனில் உள்ளிட்டோர் ‘பீஸ்ட்’ தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியுள்ளனர்.

இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் நடிகர் யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு இணையாக ‘பீஸ்ட்’ வெளியாவதால் தங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

விஜய் தனது அடுத்த படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தை தில்ராஜு தயாரிக்கிறார்.