கர்ணண் படத்துக்காக நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள் : வைரலாகும் வீடியோ!

0
54

கர்ணண் படத்துக்காக நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள் : வைரலாகும் வீடியோ!

கர்ணண் படத்துக்காக தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்திருக்கிறார்கள்.

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.

கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு, ‘சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் கர்ணன் படத்தின் பேனரை வைத்து இருக்கிறார்கள். இதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:

சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் – தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு டுவீட்