கட்டம் சொல்லுது விமர்சனம் :கட்டம் சொல்லுது அனைவரும் பார்த்து ரசித்து அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அதிர்ஷ்ட யோகம்

0
61

கட்டம் சொல்லுது விமர்சனம் : கட்டம் சொல்லுது அனைவரும் பார்த்து ரசித்து அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அதிர்ஷ்ட யோகம்

தீபா சங்கர் மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து விட்டு மகளின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வரன் பொருத்தம் பார்க்க ஜோசியரிடம் செல்கிறார். அங்கே தன் நண்பனுக்கு வரன் பார்க்க வரும் திடியனை சந்தித்து நட்பாகிறார். திடியன் தன் நண்பன் எழிலன் கதையை சொல்ல சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருக்கும் தீபா சங்கருக்கு ஒரு யோசனை பளிச்சிடுகிறது. தன் மகளுக்கு எழிலனை மணமுடிக்க நினைக்கும் நேரத்தில் திடியன் சொன்ன ஒரு விஷயத்தால் கடுப்பாகி சென்று விடுகிறார். அப்படி என்ன தான் நடந்தது? எழிலனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன? தீபா சங்கர் தன் மகளுக்கு வரன் பார்த்து முடித்தாரா? எழிலன் என்ன ஆனார்? என்பதே கதையின் முடிவு.

தீபா சங்கரைத் தவிர எஸ்.ஜி.எழிலன், திடியன், சின்னத்துரை, சகுந்தலா, ராஜா அய்யப்பன், சபரிஸ்,மணிவாசன், வீரமணி, ராணிஜெயா அனைவருமே புதுமுகங்கள் அறிமுகமாகும் படத்திலேயே முத்திரை பதித்துள்ளனர்.

சபரிஸின் ஒளிப்பதிவு, தமீம் அன்சாரியின் இசையும் வித்தியாசமான கதைக்களத்தில் கை கொடுத்திருப்பதோடு அவர்களின் உழைப்பும் பளிச்சிடுகிறது.

விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங், பிரவீன், ஜனார்த்தனன் கலையும் பேசுப்படி உள்ளது.

படத்தின் தலைப்பே ஜோசியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அது போல் படத்திலும் ஜோசியத்தை நம்புகிறவர்கள் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள், அதே ஜோசியத்தை வைத்து நல்லதையும் செய்யலாம் என்பதை இரு வேறு கருத்துக்களாக நான்கு நண்பர்களின் நட்போடு, நண்பரின் கதையோடு, மகளின் வாழ்க்கை அமைய போராடும் தாயின் பரிதவிப்போடு, காமெடி கலந்து படம் முழுவதும் அள்ளித் தெளித்த பூக்கோலம் போல் அழகாக கொடுத்து, இறுதி காட்சியில் நச்சென காட்டிய விதம் அருமை. தன்னிச்சையாக தன்னம்பிக்கையாக தன்னை நம்பி படமெடுத்து வித்தியாசத்தோடு திரைக்கதையை கொடுத்திருக்கும் விதத்திற்காகவே இயக்குனர் எழிலனை பாராட்டலாம், கொண்டாடலாம்.

மொத்தத்தில் கண்ணா கணேசன் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் கட்டம் சொல்லுது அனைவரும் பார்த்து ரசித்து அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அதிர்ஷ்ட யோகம்.