ஐமேக்ஸில் வெளியாகும் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0
168

ஐமேக்ஸில் வெளியாகும் பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம்.

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இப்படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, “பொன்னியின் செல்வன் -1” ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 6-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல், தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.