உத்ரா விமர்சனம்: உத்ரா மரண பயம் கொடுத்து பழி தீர்க்கும் பெண்ணின் கதை

0
119

உத்ரா விமர்சனம்: உத்ரா மரண பயம் கொடுத்து பழி தீர்க்கும் பெண்ணின் கதை

ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி  தயாரித்துள்ள படம் உத்ரா. இதில் ரக்ஷா, கௌசல்யா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இசை சாய்தேவ். ஒளிப்பதிவு ரமேஷ். வசனம் குமார். எடிட்டிங் எஸ்.பி.அஹமது. சண்டை  கில்லி சேகர். நடனம்  ராதிகா. திரைக்கதை, எழுதி  இயக்கியுள்ளார் நவீன் கிருஷ்ணா.

வட்டப்பாறை மலைக்கிராமத்தில் உத்ரா தன் பாட்டியின் அரவணைப்பில் வளர,அந்த ஊர் அம்மன் தீவீர பக்தையாக இருக்கிறார். எப்பொழுதும் அம்மனுக்கு சேவை செய்வதில் பொழுதை கழிக்கிறார். அங்கே வேலை செய்ய வரும் மின்சார ஊழியரரை காதலிக்க, அதற்கு ஒரு தலையாக உத்ராவை காதலிக்கும் செல்வாக்கு மிகுந்த மாசி ஊர் மக்களை திரட்டி எதிரிக்க வைக்கிறார். ஊர் மக்கள் எதிர்ப்பை மீறி உத்ரா தன் காதனை திருமணம் செய்ய அன்று மாசி  உத்ராவின் காதலனை கொன்று அவளை அவமானப்படுத்துவதால் அம்மன் முன் உத்ரா மாசியையும், ஊர் மக்களையும்  பழி வாங்குவேன் என்று சபதம் போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அன்றிலிருந்து ஊர் மக்கள் திருமணம் செய்து கொண்டால் அன்றிரவே உத்ரா அரூபமாக வந்து அவர்களை கொலை செய்து விடுவதால் ஊரில் திருமணம்,மகிழ்ச்சி இன்றி வாழ்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டு பாட ஆரய்ச்சிக்காக அந்த ஊருக்கு வரும் மூன்று கல்லூரி ஜோடிகள் இது மூடநம்பிக்கை என்று கூறி அதை புர்pய வைக்க முயற்சி செய்கின்றனர். அதன் பின் தான் உத்ராவின் சாபத்தை கேள்;விபட்டு மாசியை தேடி செல்கின்றனர். மாரி இவர்களுக்கு கிடைத்தானா? உத்ரா தன் பழியை தீர்த்துக் கொண்டாரா? ஊர் மக்களுக்கு விடிவு காலம் ஏற்பட்டதா? என்பதே க்ளைமேக்ஸ்.

இதில் உத்ராவாக மலையாள பட நடிகை ரக்ஷா சிறப்பாக இயல்பான வசனங்களை பேசி அசத்திவிடுகிறார்.அம்மன் வேடத்தில் கௌசல்யா முக்கிய வேடத்தில் தோன்றிவிட்டு செல்கிறார்.மற்றும் இதில் நடித்திருக்கும் அனைவரின் பங்களிப்பு படத்திற்கு பெரும் பலம்.

ஏ.ரமேஷின் ஒளிப்பதிவு மலைக்கிராமத்தின் எழிலை அழகாகவும் ஊர் மக்களின் வாழ்வியலையும் காட்சிக் கோணங்களில் கொடுத்து அசத்தியுள்ளார்.

சாய்தேவின் பின்னணி இசை கை கொடுத்துள்ளது.

ஆரம்ப காட்சியில் உத்ராவின் ஆரூபம் கொலை செய்வதை சிஜியில் காட்டியிருக்கும் விதம் அருமை, அதன் பின் உத்ராவின் பிளாஸ்பேக் கதை, ஊர் மக்கள் நிலை, சாபம், பழி தீர்ப்பு என்று சிறப்பாக கொடுத்திருந்தாலும், திரைக்கதையில் மற்ற காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் தோய்வுடன் செல்வதை தவிர்த்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் நவீன் கிருஷ்ணா கற்பனை கலந்த திகில் படத்திற்காக எடுத்திருக்கும் முயற்சி கலந்த உழைப்பிற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி  தயாரித்துள்ள உத்ரா மரண பயம் கொடுத்து பழி தீர்க்கும் பெண்ணின் கதை.