ஆபரேஷன் ஜுஜுபி விமர்சனம் : புதிய திட்டங்களை செயல் வடிவத்தில், எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வைக்கும் ஆபரேஷன் ஜுஜுபி

0
77

ஆபரேஷன் ஜுஜுபி விமர்சனம் : புதிய திட்டங்களை செயல் வடிவத்தில், எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வைக்கும் ஆபரேஷன் ஜுஜுபி

இந்தியாவில் இருக்கும் அரசியல் அமைப்புகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று சாம்ஸ் வறுத்தப்படுகிறார். அப்பொழுது கடவுள் அவர் முன் தோன்றி ஜுஜுபி என்ற பானத்தை பருக கொடுக்கிறார். அதை பருகியவுடன் இந்தியாவை மாற்ற நினைக்கும் திட்டங்கள் உருவாகிறது. அதை செயல்படுத்த முனைப்புடன் இறங்குகிநார் சாம்ஸ். பெரிய பெரிய அரசியல் கட்சிகள்,அரசியல்வாதிகள் எல்லோரையும் தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி போட அதை எதிர் கொள்ள முடியாமல் அனைத்து கட்சிகளும் ஏதோ ஒரு காரணததை சொல்லி தேர்தலில் வாபஸ் வாங்கிக் கொள்ள இளைஞர் ராகவ் இந்திய நாட்டின் பிரதமராகிறார். அவரின் புதிய செயல்வடிவிலான திட்டங்களால் இந்தியாவில் உள்ள பல துறைகள் முன்னேற தொடங்கப்படுவதாக கனவு காண்கிறார் சாம்ஸ். இதை நிறைவேறுவது நம் கையில் தான் உள்ளது என்றும் நூறு சதவீத ஒட்டு விழுந்தால் தான் இந்தியாவின் எதிர்காலத்தை கையிலெடுக்க முடியும் என்பதையும் தௌ;ளத்தெளிவாக சொல்லியிருப்பதே படத்தின் கதை.

சாம்ஸ், வினோதினி, ராகவ், வையாபுரி, வெங்கட் சுபா, இயக்குநர் சந்தானபாரதி, படவா கோபி, ஜெகன், மனோபாலா என சிலர் காமெடி என்ற தங்களது அடையாளத்தை காட்டாமல், ஆங்கிலம் பேசும் கதாப்பாத்திரங்களாக உச்சரிப்பும், புரியும்படி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், படத்தொகுப்பாளர் வினோத் ஸ்ரீதர் இருவரும் அசத்தல் ரகம்.

கதை எழுதி இயக்கி தயாரித்திருக்கும் அருண்காந்த், இசை, கலர் மிக்ஸிங், ஒலி கலவை உள்ளிட்ட 12 பணிகளை தன் உழைப்பால் கொடுத்து, கச்சிதமாக இயக்கியுள்ளார். சில இடங்களில் நாடகத்தன்மை பளிச்சிட்டாலும் சொல்ல வந்த கருத்தை பதிய செய்ததில் வெற்றியும் பெற்றிருப்பது சந்தோஷம் தான். ஒரு நாடு முன்னேற்றம் அடைய அந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருப்பது தான் உண்மையான முன்னேற்றம் என்ற கருத்தை அரசியல் கலந்த கற்பனை கதையாக வடிவமைத்து ஆங்கிலத்தில் அழுத்தமாகப் பதிவு செய்ய இயக்குநர் அருண்காந்த் முயற்சி செய்து திருப்திகரமாக கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ஆபரேஷன் ஜுஜுபி புதிய திட்டங்களின் செயல் வடிவத்தில் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வைக்கிறது.