அண்ணாத்த படத்தின் கேரள திரையரங்கு உரிமை எவ்வளவு தெரியுமா?

0
73

 

அண்ணாத்த படத்தின் கேரள திரையரங்கு உரிமை எவ்வளவு தெரியுமா?

ரஜினிகாந்த் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தில் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கும் சண்டைக் காட்சிகள், பன்ச் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

அண்ணாத்த படத்தில் மறைந்த எஸ்பிபி ஒரு பாடல் பாடியுள்ளார். அதனை முதல் பாடலாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது.

மேலும் இப்படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த…’ மற்றும் ‘சாரக் காற்றே…’ ஆகிய பாடல்களும் இந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வைரலாகிவருகின்றன. தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘மருதாணி…’ பாடல் ரிலீசாகியுள்ளது. இந்தப் பாடலும் வைரலாகி ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. டி. இமான் இசையில் உருவாகியுள்ள இப்பாடலில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ ஆகியோர் நடனமாடி நடித்துள்ளனர்.

ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் இந்நிலையில், படம் ஆந்திரா, தெலுங்கானாவில் தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகிறது. இவ்விரு மாநிலங்களின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஏசியன் சினிமாஸ் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது. தெலுங்குப் பதிப்புக்கு பெத்தண்ணா என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த வருட ஆரம்பத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் கேரள திரையரங்கு விநியோக உரிமை 4.3 கோடிகளுக்கு விற்கப்பட்ட நிலையில் அண்ணாத்த படத்தின் கேரளா உரிமை 3.5 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. வழக்கமான ரஜினி படம் ஆறு கோடிகள்வரை விற்கப்படும். கொரோனா காலகட்டம் என்பதாலும், 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்கில் அனுமதிக்கப்படுவார்கள் என்பதாலும் இந்தக் குறைந்த தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.