ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் போன்று தெறிக்க விடும் வலிமை..! சென்சார்டு போர்டின் முன்னாள் ஆலோசகர் வலிமை படத்திற்கு பாராட்டு..!!

0
57

ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் போன்று தெறிக்க விடும் வலிமை..!

சென்சார்டு போர்டின் முன்னாள் ஆலோசகர் வலிமை படத்திற்கு பாராட்டு..!1

வலிமை படத்தின் அப்டேடுக்காக 2 வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு வரும் 24-ம் தேதி படம் வெளியாகவுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்த படம், கொரோனா பரவலை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் எந்த மனநிலையில் இருந்தார்களோ அதே மனநிலை மீண்டும் வந்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி தெரிந்து விட்டாலும் கூட, படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தேதி நெருங்க நெருங்க அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வலிமை திரைப்படம் fase & furious போன்று, mission impossible போன்று படு மாஸாக இருக்கும் என பாலிவுட்டின் முன்னாள் சென்சார் போர்டு ஆலோசகர் ராஜேஷ் வாசனி தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு பூஜையோடு நிறுத்தப்பட்டது வலிமை திரைப்படம். கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து தள்ளிப் போய்கொண்டே இருந்த படத்தின் படப்பிடிப்பால் 2 வருடங்களாக தீபாவளிக்கும், பொங்கலுக்கும் அஜித்தின் படத்தை பார்க்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர் ரசிகர்கள். 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடலாம் என நினைக்கப்பட்ட வலிமை படம் பூஜையோடு நிறுத்தப்பட்டதை எண்ணி கவலை அடைந்த ரசிகர்கள் கிரிக்கெட் மைதானம் தொடங்கி அமைச்சர்கள் வரை வலிமை அப்டேட் கேட்க துவங்கிவிட்டனர். 2021-ம் ஆண்டு கொரோனாவின் கோரப்பிடி கட்டுக்குள் வந்ததால், திரைப்பட படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமானது. அறிவிப்பு வெளியான வேகத்தில் படப்பிடிப்பை இந்தியா, வெளிநாடு என சூட்டோடு சூடாக படப்பிடிப்பை முடித்தனர் படக்குழுவினர். படத்தின் அப்டேடுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட் வரத் துவங்கியது.

படத்திலிருந்து அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், சிங்கிங் டிராக், டீசர், டிரைலர் என வரிசையாக படம் பற்றின அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்தனர் படக்குழுவினர். தொடர்ந்து செண்ட்டிமெண்ட் படங்களாகவே நடித்து வந்த அஜித்தை ஒரு மாஸான ஹீரோவாக பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை இப்படம் மூலம் நிச்சயம் நிறைவேறும் என கூறப்பட்டது. பைக் ரேசர்களாக இருக்கும் சமூக விரோதிகளின் கும்பலை பிடிக்கும் ஒரு காவல்துறை அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடித்திருக்கிறார். படத்திலிருந்து வெளியான கிளிம்ஸ்கள் தான் அஜித்தை அடுத்தகட்ட நகர்வுக்கு எடுத்துச் சென்றது. பைக் ஸ்டெண்ட் செய்யும் போது கீழே விழுந்து, மீண்டும் முயற்சித்து அதனை வெற்றிகரமாக செய்து முடித்த அஜித்தை பார்த்து மெய்சிலிர்த்து போனார்கள் ரசிகர்கள். ஒருவழியாக அனைத்தும் முடிந்து போன தீபாவளிக்கே படம் வெளியாக இருந்த நிலையில், பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பொங்கல் ஏ.கே பொங்கல் என 2 வருட காத்திருப்பையும் கொட்டித் தீர்க்க ஆவலாக காத்திருந்த ரசிகர்களுக்கும் மீண்டுமொரு இடியாக வந்தது அந்த அறிவிப்பு.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படத்தை சொன்ன தேதியில் வெளியிடலாம் என படத்தின் தயாரிப்பாளர் கூற, வேண்டாம் ரசிகர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என கூறி படத்தின் வெளியீட்டை நிறுத்தினார் ஏ.கே. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதால், தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில், வரும் 24-ம் தேதி படம் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்தது. மீண்டும் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்க, அவர்களின் காத்திருப்புக்கு தீனி போடும் விதமாக, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் சென்சார்போர்டு ஆலோசகருமான ராஜேஷ் வாசனி. இது குறித்து தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், ஜீ ஸ்டுடியோவின் பான் இந்தியா குழுவுடன் நாங்கள் படத்தைப் பார்த்தோம், படத்தை பார்த்து மிரண்டு விட்டோம். ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் & மிஷன் இம்பாசிபிள் படங்களுக்கு இந்திய சினிமாவின் பதில் தான் வலிமை, வெள்ளித் திரைகளை வலிமை படம் எரிய வைக்க போகிறது. ஷோமேன் போனி கபூரின் த்ரில்லர் உங்கள் மூச்சை இழுக்கும்.புஷ்பா படம் ஆரம்பம் என்றால், வலிமை க்ளைமாக்ஸாக இருக்கும். பிப்ரவரி 24, 2022 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ் – தெலுங்கு – கன்னடம் – இந்தி …!!!” என குறிப்பிட்டுள்ளார்.