ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது தனுஷின் ”வாத்தி”

0
102

ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது தனுஷின் ”வாத்தி”

தமிழ் சினிமாவைத்தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் அசத்திக்கொண்டிருப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமில்லாமல் பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன், ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் போன்ற பல படங்களில் பிஸியாக உள்ளார் தனுஷ்.

இதற்கிடையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் தெலுங்கு என BILINGUAL திரைப்படமாக உருவாகவிருக்கும் இதற்கு வாத்தி என்று பெயரிட்டனர்.

இப்படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார் தனுஷ். தெலுங்கில் சார் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

கல்லூரி ஆசிரியராக தனுஷ் நடிக்கும் இப்படம் ஆக்க்ஷன் ட்ராமாவாக உருவாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.