ஹீரோவுடன் படுக்கையை பகிராததால் பட வாய்ப்பு கிடைக்கவில்லை – பிரபல நடிகை பகீர் புகார்
இந்தி சினிமாவில் கதாநாயகியாக இருந்தவர் ரவீனா டாண்டன். தமிழில் அர்ஜூனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: “90-களில் பாலிவுட்டுக்கு என்று எழுதப்படாத விதிகள் சில இருந்தது. அவற்றை பின்பற்ற மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன். பலரும் என்னை திமிர் பிடித்தவர் என நினைத்தனர். மீடியாவில் என்னைப் பற்றி தவறாக பல்வேறு கட்டுரைகள் வந்தன. ஹீரோக்கள் சொல்வதை கேட்காததால் இதுபோன்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.
ஹீரோவுடன் ஈகோ பிரச்சனை அல்லது அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள மறுத்தால், படத்தில் இருந்து நீக்கி விடுவார்கள். என்னுடைய சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டு வர பலர் முயற்சித்தார்கள். அதில் இருந்து தப்புவது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. என்னை எந்த ஹீரோவும் சிபாரிசு செய்ய மாட்டார்கள். ஏனென்றால், நான் பட வாய்ப்புக்காக எந்த ஹீரோவுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்வதில்லை”. என ரவீனா டாண்டன் கூறியுள்ளார்.