ஹரி – அருண்விஜய் புதிய கூட்டணி!

0
22

ஹரி – அருண்விஜய் புதிய கூட்டணி!

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. ‘ த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘என் ஆளோட செருப்பக்காணோம்’, ‘இமைக்காநொடிகள் ‘, ‘இஃக்லூ’ படங்களைத் தொடர்ந்து – டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் இப்போது இயக்குநர் ஹரி அருண்விஜய் கூட்டணியில் ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறது.

அதிரடி ஆக்ஷன் , குடும்பக் கதையுடன் தென் தமிழ்நாட்டுப் பின்புலம் என்கிற கலவையில் ஹரி இயக்கியுள்ள அனைத்துப் படங்களும் பெரிய வெற்றி பெற்றவை .அவற்றில் நடித்த கதாநாயகனைப் பல படிகள் மேலே ஏற்றி வைத்தவை. அப்படிப்பட்ட வணிக இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இப்புதிய படம் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திள்ளது.

இதன் படப்பிடிப்பு 2021 பிப்ரவரியில் தொடங்கி ஆகஸ்டில் படம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

சரியான திட்டமிடல் – முறையான முன் தயாரிப்போடு படப்பிடிப்புக்குச் செல்பவர் ஹரி. எனவே படத்தை விரைவாக முடித்து குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதிக்குள் வெளியிட வழிசெய்வார்.
இதன் படபிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் பல பகுதிகளில் நடைபெறும். மற்ற விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
தெலுங்கிலும் பெரிய அளவில் வெளியிட திட்ட மிட்டுள்ளார்கள்.
இணை தயாரிப்பு: G.அருண்குமார்
தயாரிப்பு : வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் .