ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்

0
72

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம்

சீயான் விக்ரம் தனது அடுத்தப் படத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் சீயான் விக்ரமின் 61 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது 23 ஆவது திரைப்படம்.

அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகியப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா. ரஞ்சித். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்போது காளிதாஸ் , துஷாரா, கலையரசன் , ஹரி நடிப்பில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்கிவருகிறார். இறுதிக்கட்டபடப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் சீயான் விக்ரமுடன் இணைந்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஹீரோவாக சீயான் விக்ரம் நடிக்கவுள்ள இந்த புதிய படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.