ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் காட்டேரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் காட்டேரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இயக்குனர் டீகே உருவாக்கி இருக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 17ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அரண்மனை, காஞ்சனா போன்ற படங்கள் வரிசையில் இந்த படமும் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.