“ஸ்குவிட் கேம் சீசன் 2 நிச்சயம்” – இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் உறுதி

0
35

“ஸ்குவிட் கேம் சீசன் 2 நிச்சயம்” – இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் உறுதி

நெட்ஃபிக்ஸ் தொடரான ஸ்க்விட் கேம் வெளியான சில நாட்களிலேயே மிகவும் பிரபலமடைந்தது. இதன் அடுத்த சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வெப்சீரிஸின் இயக்குநர் ஹ்வாங் டோங்-ஹ்யுக் சீசன் 2 வருவது உறுதி என தெரிவித்துள்ளார்.

சீசன் 2க்கான கதைக்களம் இன்னும் எழுத்து வடிவத்தை பெறவில்லை என்றும், அது குறித்து திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். விரைவில் இதற்கான அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் எனவும், புதிய சீசனில் Gi-hun மீண்டும் வருவார் என்றும் இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.