ஷங்கர் – ராம் சரண் இணையும்  படத்தின் வித்தியாசமான அறிமுக போஸ்டர்!

ஷங்கர் – ராம் சரண் இணையும்  படத்தின் வித்தியாசமான அறிமுக போஸ்டர்!

இயக்குநர் ஷங்கர் – தெலுங்கு நடிகர் ராம் சரண் இணையும் புதிய படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்படத்தை பாதியில் விட்டு, ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க தயாரானார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

இந்நிலையில் படக்குழுவினரை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்துள்ளனர். படத்தின் நாயகன் ராம்சரண், நாயகி கியாரா அத்வானி, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் ஒரு புகைப்படத்தில் தோன்றும்படி வித்தியாசமான படத்தை அறிமுகம் செய்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதோடு இன்று ராம் சரண் – ஷங்கர் படத்தின் பூஜையும் நடந்தது. பூஜை முடிந்ததும், ராம் சரண் நடிக்க, சிரஞ்சீவி கிளாப் அடிக்க, ஷங்கர் ஆக்ஷன் சொல்ல முதல் காட்சி படமாக்கப்பட்டது. அதோடு ரன்வீர் சிங், சிரஞ்சீவி, ராஜமௌலி ஆகியோர் ஷங்கர் – ராம் சரண் படத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

பூஜை என்னவோ ஷங்கர் படத்திற்குதான். ஆனால், புஜை புகைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு நடிகர் ரன்வீர் சிங்கின் ஹேர் ஸ்டைல்தான் ஒட்டுமொத்தமாக அனைவரையும் ஈர்ப்பதாக இணையவாசிகள் கூறுகின்றனர்.