வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் பாண்டிச்சேரி வீடியோ!

0

வைரலாகும் விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் பாண்டிச்சேரி வீடியோ!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக வலம் வருவது அனைவரும் அறிந்ததே. நானும் ரவுடிதான் படத்தில் இருவருக்கும் மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

அதில், விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரும் கடற்கரையில் நின்றபடி பேசும் காட்சியை விளக்குகிறார் விக்னேஷ் சிவன். அதை ஆர்வத்துடனும், புன்னகையுடனும் கேட்டபடி நிற்கிறார் நயன்தாரா. இதுவரை வெளியிடாத இந்த வீடியோவை கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.