வைரலாகும் எஸ்.தாணு – தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

0
12

வைரலாகும் எஸ்.தாணு – தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானே வருவேன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன் படி, படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் முதல் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த பின்னணியில் ஸ்டைலான ஆடையில் சிகரெட்டுடன் தனுஷ் ஸ்டைலாக நிற்கிறார். இந்தப் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.