வேதாளம் தெலுங்கு ரீமேக்: அஜித் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்?
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படத்தை அப்போதே தெலுங்கில் ரீமேக் செய்வதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது இப்படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளில் சிரஞ்சீவி ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வேதாளம் ரீமேக்கில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது, இயக்குனர் மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவியின் பிறந்தநாளன்று ‘வேதாளம்’ ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.