வேட்டை நாய் விமர்சனம்

0
32

வேட்டை நாய் விமர்சனம்

ராம்கியிடம் அடியாளாக வேலை செய்யும் ஆர்.கே.சுரேஷ், மற்றவர்களை விட கூர்மையாக செயல்படுவதில் வல்லவர். இதனால் ராம்கியின் நன்மதிப்பை பெற்ற ஆர்.கே.சுரேஷ், காதலித்த உறவுக்கார பெண்ணையே மணக்கிறார். சுரேஷ் மனைவி சுபிக்ஷாவின் எதிர்ப்பால் ராம்கியிடமிருந்து விலகி விடுகிறார். ஏற்னவே பகையை சம்பாதித்திருக்கும் சுரேஷை அவரது நண்பர்கள் மற்றும் சிலர் கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். இதற்கிடையே மலையாள தொழிலதிபரின் கீழ் வேலை செய்து நன்றாக வாழ்கிறார். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடக்க வேலையை இழக்கிறார். கர்ப்பிணி மனைவியை காப்பாற்ற மீண்டும் வறுமையில் வாடாமல் இருக்க தாதா ராம்கியிடம் வேலை கேட்டுச் செல்கிறார். அதன் பின் நடந்தது என்ன? வேலை கிடைத்ததா? இல்லையா? என்பதே க்ளைமேக்ஸ்.

யதார்த்தமான அடியாளாக ஆர்.கே.சுரேஷ், அன்பான, பிடிவாதமான மனைவியாக சுபிக்ஷா, தாதாவாக ராம்கி. பாசக்கார அத்தையாக ரமா, குடியார உதவாத மாமாவாக நமோ நரோயணன் மற்றும் பலர் இயல்பான நடிப்பிற்கு உத்தரவாதம்.

முனிஷ் ஈஸ்வரனின் ஒளிப்பதிவு, கணேஷ் சந்திரசேகரன் இசை படத்தின் மலை கிராமத்து அழகை கலந்து கொடுத்திருக்கின்றனர்.

தாதாவிடம் வேலை செய்யும் அடியாளின் வாழ்வியலை சொல்லும் எண்பதுகளில் வந்த படங்களின் பாணியில் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஜெய்சங்கர். இருந்தாலும் பல சோகக் காட்சிகளை இணைத்து சிறப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜெய்சங்கர்.

மொத்தத்தில்  சுரபி பிக்சர்ஸ் வழங்கும் ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில வேட்டை நாய் அன்பு கட்டளைக்கு அடி பணியும்.