வெற்றிமாறன் – விஜய் சேதுபதி – சூரியுடன் ‘விடுதலை’ படத்தில் இணைந்த கெளதம் மேனன்!

0
2

வெற்றிமாறன் – விஜய் சேதுபதி – சூரியுடன் ‘விடுதலை’ படத்தில் இணைந்த கெளதம் மேனன்!

RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” !

’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன், பாவக்கதைகள் படத்தில் இடம்பெற்ற நான்கு பாகங்களில் ஒன்றான ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார். அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், சூரியுடன் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இளையராஜா இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். R.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார்.

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை முடித்த கையோடு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டது படக்குழு.

போலீஸாக நடிக்கும் சூரி, கையில் விலங்குடன் இருக்கும் விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டல் போஸ்டரும் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கெளதம் மேனன் இணைந்திருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.