வெற்றிமாறனை தொடர்ந்து அமீர் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி?

0
65

வெற்றிமாறனை தொடர்ந்து அமீர் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி?

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பரோட்டா சூரியாக வலம் வந்தவர் நடிகர் சூரி. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. பின்னர் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி படத்திற்கு ‘விடுதலை’ என்று பெயரிடப்பட்டு சில புகைப்படங்களும் வெளியாகியது.

இதனை தொடர்ந்து டான், விருமன், எதற்கும் துணிந்தவன், போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி. தற்போது இயக்குனர் அமீர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய அமீர் படத்தில் சூரி நடிக்கயிருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.