வெங்கட் பிரபுவின் மன்மதலீலை – வெளியான புகைப்படம்

0
88

வெங்கட் பிரபுவின் மன்மதலீலை – வெளியான புகைப்படம்

2007-இல் வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி பிறகு முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 28, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீத்தில் இவர் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படம் சிம்புவிற்கும் பெரிய கம்பாக் திரைப்படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் புதிய கான்சப்ட்டில் தொடங்கி, பல தடங்கள்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் காத்திருந்தனர். அந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு விதைதூவும் வகையாக அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார்.

அவர் இயக்கும் அடுத்த படத்திற்கு மன்மதலீலை என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

முத்தமிட்ட உதடுகள் இடம் பெற்று அசோக் செல்வன் இருவிதமாக இருக்கும் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.