வீராபுரம் 220 விமர்சனம்

0
14

வீராபுரம் 220 விமர்சனம்

சுபம் கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் புதுமுக இயக்குனர் செந்தில்குமார் இயக்கிய படம் ‘வீராபுரம் 220″.
அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ், ஜெயக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – ரித்தேஷ்-ஸ்ரீதர், ஒளிப்பதிவு – பிரேம்குமார்,  படத்தொகுப்பு- கணேஷ், இணை தயாரிப்பு-குணசேகரன் கன்னியப்பன், மக்கள் தொடர்பு-ஆனந்த்.
தன் தந்தை நடத்தும் ஹோட்டலில் வேலை செய்யும் மகேஷ் தன் நண்பர்கள் நால்வருடன் ஜாலியாக ஊர் சுற்றி பொழுதை போக்குகிறார். நண்பர் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட, மற்ற நண்பர்களின் நடத்தையால் திருமணம் தடை படுகிறது. இதனால் ஆத்திரமடையும் நண்பர், மகேஷ் மற்றும் நண்பர்களை புறக்கணித்து அவர்களுக்கே எதிரியாகிறார்.அதே சமயம் மகேஷின் தந்தை விபத்தால் இறக்கிறார். இதற்கு காரணம் தன் நண்பன் தான் முதலில் சந்தேகப்படும் மகேஷ், பின்னர் உண்மை அறிந்து கொலையாளிகளை தேடிச் செல்கிறார். மகேஷ் குற்றவாளிகளை கண்டுபிடித்தாரா? தந்தை இறக்க என்ன காரணம்? கிராமத்தில் நடக்கும் மணல் கொள்ளைகளை எப்படித் தடுத்தார்? என்பதே க்ளைமேக்ஸ்.
நாயகனாக அங்காடித்தெரு மகேஷ், நாயகியாக மேக்னா, சதீஷ், ஜெயக்குமார் மற்றும் பல புதுமுகங்கள் முடிந்தவரை முத்திரை பதித்துள்ளனர்.
ரித்தேஷ்; இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும், கணேஷின் படத்தொகுப்பும் படத்திற்கு நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்கம்-செந்தில்குமார்.கிராமத்தில் இரவில் நடக்கும் மணல் கொள்ளையால் அதிவேகமாக வரும் லாரியில் அடிபட்டு பலர் இறக்கின்றனர், இதற்கு காரணமாக இருக்கும் ரௌடி, அரசியல்வாதி, இன்ஸ்பெக்டர் ஆகிய மூவரையும் இறுதியில் நாயகன் எப்படி தன் நண்பர்களுடன் சேர்ந்து பழி வாங்குகிறார் என்பதே கதைக்களம். முதல் பாதி காதல், நட்பு, பகை என்று நண்பர்களை சுற்றி நடக்கும் கதை, இரண்டாம் பாதி இறுதியில் தான் மணல் மாஃபியா பற்றிய முடிச்சுக்களை சொல்லியிருக்கிறார் இயக்குனர் செந்தில்குமார்.
மொத்தத்தில் வீராபுரம் 220 மணல் அள்ளும் அரசியல் தந்திரம்.