வி 1 மர்டர் கேஸ் திரை விமர்சனம்

0

வி 1 மர்டர் கேஸ் திரை விமர்சனம்

ரேட்டிங்

பாரடிகெம் பிக்சர்ஸ் மற்;றும் கலர்ஃபூல் பேடா முவ்மெண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அரவிந்த் தர்மராஜ், என்.ஏ.ராமு, சரவணன் பொன்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் வி 1 மர்டர் கேஸ் படத்தை இயக்கியிருக்கிறார் பவல் நவகீதன்.

தன் வாழ்க்கையில் நடந்த சோகத் சம்பவத்தால் இருட்டை கண்டால் பயப்படும் நிலைக்கு தள்ளப்படும் ராம் அருண் அதற்கான உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனிடையே தடவியல் துறையில் வேலை செய்யும் ராம் அருண், விஷ்ணுப்பிரியா இருவரும் சேர்ந்து இரவில் கொலை செய்யப்பட்ட பெண்ணை பற்றி விசாரிக்க செல்கின்றனர். அவர்கள் விசாரணை மேற்கொள்ளும் போதே அந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் தற்கொலை செய்து கொள்கிறார். அதன் பின் அவர்கள் விசாரணை வளையத்திற்குள் வரும் அத்தனை நபர்களிடமிருந்தும் கொலைக்கான காரணம் கண்டு பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இறுதிக்கட்ட விசாரணையின் போது உண்மையான  குற்றவாளியை கண்டுபிடித்தார்களா? ராம் அருண் சாமார்த்தியமாக விசாரணையை மேற்கொண்டாரா? அதில் வெற்றி பெற்றாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணுப்பிரியா பிள்ளை, காயத்ரி, லிஜேஷ், மைம் கோபி, லிங்கா ஆகியோர் அனைவரும் இயல்பான கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவும், ரோனி ரேப்பலின்  இசையும் க்ரைம் த்ரில்லருக்கான விறுவிறுப்பை இவர்களின் உழைப்பால் எட்டியிருக்கிறார்கள்.

இயக்கம்-பவல் நவகீதன். ஒரு பெண்ணின் கொலையை துப்பறிய செல்லும் போலீசிற்கு பல  இடர்பாடுகள், அதை தாண்டி விசாரணையில்   ஏற்படும் சம்பவங்களால் நிலை தடுமாறினாலும், இறுதியில் சஸ்பென்சாக திரைக்கதை கொண்டு சென்ற  விதம் படத்திற்கு பலம். படம் முழுவதும் விசாரணை என்ற பெயரில் மெதுவாக கொண்டு சென்றாலும் உண்மையான குற்றவாளியை இறுதியில் காட்டியிருக்கும் விதம் எதிர்பாராத க்ளைமேக்ஸ்.

மொத்தத்தில் வி 1 மர்டர் கேஸ் புலன் விசாரணையில் திரும்பி பார்க்க வைக்கிறது.

நம்ம பார்வையில் ‘வி 1 மர்டர் கேஸ்’ படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.