விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் தீர்ப்பு!

0
57

விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் தீர்ப்பு!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் விஷால் தரப்பில் பாண்டவர் அணியும், பாக்யராஜை தலைவராக கொண்டு, ஐசரி கணேஷ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமி அணியும் போட்டியிட்டன. இதன் முடிவுகள் அறுவிக்கப்படாத நிலையில் தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இரண்டு வருடங்களாக தொடந்து நடந்து வந்த வழக்கில் தற்போது வழக்கு விசாரனை வாய்தா முடிந்து விரைவில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. நீதி மன்றத்தில் சில நாட்களுக்கு முன் நடிகர் சங்க அணி தரப்பு வாதம் நடைபெற்ற நிலையில், தற்போது எதிர் தரப்பு வாதம் நடைபெற்றது. நீதிமன்ற வாய்தாக்கள் அனைத்தும் முடிந்த நிலையில், விரைவில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.