விரைவில் துவங்கும் கிருத்திகா உதயநிதியின் படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
5

விரைவில் துவங்கும் கிருத்திகா உதயநிதியின் படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடைசியாக, கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், தனது மூன்றாவது படம்குறித்து அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார் கிருத்திகா. இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள். ஈஸ்ட் ரைஸ் கிரியேஷன் தயாரிக்கிறது.