‘விநோதய சித்தம்’ திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” – சமுத்திரகனி

0
82

‘விநோதய சித்தம்’ திரைப்படம் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” – சமுத்திரகனி

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ படம் ஜி5 ஒரிஜினலில் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகிறது.

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரகனி இயக்கியிருக்கும் திரைப்படம் விநோதய சித்தம். இதில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய படக்குழுவினர், சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை முன்வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிஜிட்டல் வெளியீடு  சென்னையில் நடைபெற்றது .

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசியவை,

இந்த படத்திற்கு அதிக செலவு செய்யாமல் குறைந்த செலவில் மிக அருமையாக படத்தை எடுத்து தந்துள்ளார் சமுத்திரக்கனி .இந்த படத்தை பார்த்து பெண்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுது உள்ளனர். நீங்கள் இந்த படத்தை பார்க்கும் பொழுது உங்களை அறியாமலேயே எழுந்து நின்று கை தட்டுவீர்கள் .

நடிகர் சமுத்திரகனி பேசியவை,

பாலுமகேந்திரா சார் சொன்னபடி ஒரு சாதாரண கதையை இயக்குனர் இயக்குவான் . ஒரு நல்ல கதை இயக்குனரை இயக்கும் . அதுபோல இந்தப் படம் எல்லோரையும் இயக்க வைத்து நல்ல படமாக வெளிவந்துள்ளது . ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இந்தப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை உணர்ந்து கொள்ளமுடியும். இந்த படம் பார்த்தால் கண்டிப்பாக உளவியல் ரீதியாக சிறு மாற்றத்தை உணர்வீர்கள். நான் படைத்த படைப்புகளில் இதுதான் சிறந்த படைப்பாக என் மனமார நம்புகிறேன். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசியவை,

இயக்குனர் சமுத்திரகனி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்த படத்தை தயாரித்த ராமநாதன் சாருக்கும் இப்படிப்பட்ட நல்ல படத்தை வெளியிடும் ZEE 5 நிறுவனத்திற்கும் நன்றி. இப்படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மிக அருமையாக கொண்டுவந்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் .இதுவரைக்கும் சப்போர்ட் செய்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.

நடிகர் அசோக் பேசியவை,

வினோதய சித்தம் இது வெறும் படம் அல்ல .நம் வாழ்க்கையில் அனைவரும் கற்கவேண்டிய பாடமும் கூட. அப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தை இந்த படத்தில் சமுத்திரக்கனி கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு அருமையான படைப்பில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குனர் சமுத்திரகனி சாருக்கும் அபிராமி ராமணநாதன் சாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசியவை :

இந்த படத்திற்கு மிக கவனமாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் என சமுத்திரகனி தெரிவித்தார் அதுபோலவே படத்தில் காட்சிகள் அருமையாக வந்துள்ளது. இந்த படத்தை 19 நாட்களில் எடுத்து முடித்தோம். அது சமுத்திரக்கனியால் மட்டுமே முடியும் .இந்த படத்தில் நவரசம் கலந்த நடிப்பில் தம்பி ராமையா அவர்கள் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி சார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.